உ.பி வன்முறை : என் மகனுக்கு இதுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது - மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா!
உத்தரபிரதேசத்தில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் கூட்டத்திற்கு நடுவே மத்திய அமைச்சர் மகனின் கார் மோதி 2 விவசாயிகள் உயிரிழந்தனர்.
உத்தர பிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்கசென்றனர்.
அபோது அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி ஏந்தி வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் கூட்டத்தில் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் கார் புகுந்தது.இதில் கார் மோதி ஏராளமான விவசாயிகள் காயமடைந்தனர்.
இந்த விபத்தில் இரண்டு விவசாயிகள் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விழாவிற்கு வருகை தந்த பாஜக தலைவர்களுக்கும் கருப்புக் கொடி காட்டியதால் விவசாயிகள் மீது காரை ஏற்றியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு புகுந்த காரில் இருந்தவர்களை கீழே இறக்கி விட்டு காரை விவசாயிகள் தீயிட்டுக் கொளுத்தினர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 2 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் 8 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு பலவேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த வன்முறை சம்பவத்தின் போது தனது மகன் அங்கு இல்லை என்றும் அதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் இருப்ப்தாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.