10'ல் 8 பேர் குடிச்சிட்டு தான் சிட்டி'ல வண்டி ஓட்டுறாங்க..! வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்
மதுபோதையின் கீழ் தான் 10'இல் 8 பேர் வாகனம் ஓட்டுவதாக கருத்துக்கணிப்பு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
வாகன இயக்கம்
விபத்துக்கள் ஏற்பட காரணமாக பெரும்பாலும், மதுபோதையில் தான் பலரும் வாகனம் ஓட்டுவது கண்டறியப்பட்டு வருகின்றது.
அரசும் மக்களுக்கு இது குறித்து பல விழிப்புணர்வுகளை அளித்த நிலையிலும், அந்த விவகாரத்தில் திருந்த வேண்டியவர்கள் திருந்தியதாக தெரியவில்லை.
10'ல் 8 பேர்
இந்நிலையில் தான் கருத்துக்கணிப்பு ஒன்றில், அதிர்ச்சி கூறிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது டெல்லி நகரில் 10'ல் 8 பேர் மதுபோதையில் தாக்கத்தில் தான் வாகனம் ஓட்டுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு எதிரான சமூகம் (CADD) என்ற அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வில் இது குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
கருத்துக்கணிப்பில் பங்கேற்றுக்கொண்ட 30,000 பேரில் 81.2% பேர் மது போதையில் வாகனம் ஓட்டியதாக வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.