உத்தரவு மீறி செயல்பட்டதாக 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு 2 வாரம் சிறை தண்டனை - உயர்நீதிமன்றம் அதிரடி

andhraiasofficers 8officersgetsjail andhrahighcourt highcourtorder
By Swetha Subash Mar 31, 2022 02:27 PM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

உத்தரவு மீறி செயல்பட்டதாக ஆந்திராவில் 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு 2 வாரம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது ஆந்திரா உயர்நீதிமன்றம்.

ஆந்திராவில் தற்போதைய ஆட்சியில் அனைத்து கிராமங்களிலும் கிராம செயலகம் அமைத்து, கிராமங்களில் உள்ள மக்களுக்கு பொதுசேவைகள் நடைபெற்று வருகிறது.

இந்த கிராம செயலகங்கள், அங்குள்ள அரசு பள்ளி வளாகத்திலேயே கட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து பல்வேறு தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அரசுப்பள்ளி வளாகத்தில் இந்த செயலகம் செயல்படக்கூடாது என்றும், மாவட்ட உயர் அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மதிக்காமல் செயல்பட்டதாக 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு 2 வாரம் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்திருக்கிறது.

இதையடுத்து செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்ட அதிகாரிகளின் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், சிறை தண்டனையில் இருந்து விலக்கு அளித்தது. 

அதற்கு மாறாக ஒரு வருடத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் மாதம் ஒருமுறை பணியாற்றி சொந்த செலவில் உணவளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.