வால்பாறையில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து - 8 பேர் உயிரிழப்பு
வால்பாறையில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
வால்பாறையில் விபத்து
கேரள மாநிலத்தில் இருந்து 16 சுற்றுலா பயணிகள், வேனில் கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

மலப்புரத்தை சேர்ந்த 2 பள்ளிகளின் ஆசிரியருக்கு இதில் பயணித்துள்ளனர். ஆசிரியர்கள் மட்டுமல்லாது, பள்ளி பணியாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் உட்பட 16 பேர் இந்த வாகனத்தில் பயணித்துள்ளனர்.
வால்பாறை சுற்றுலா முடித்து விட்டு திரும்பி வரும் போது, 13-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்துள்ளது.
வேன் உருண்டு 11வது வளைவில் விழுந்து நொறுங்கியதாக கூறப்படுகிறது. இதில், சம்பவ இடத்திலே 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், காயமடைந்தவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.