கடல் ஆமை கறி சாப்பிட்ட குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம் - 8 பேர் உயிரிழப்பு

Allergy Death
By Swetha Mar 09, 2024 10:52 AM GMT
Report

ஆமை கறியை சாப்பிட்டதால் 8 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆமை கறி

தான்சானியா உள்ள ஜன்ஜிபார் உட்பட்ட பகுதியில் பெம்பா என்னும் தீவு உள்ளது. இங்கு குழந்தைகள், பெரியவர்கள் என சிலர் ஆமை கறியை வாங்கி சாப்பிட்டத்தில் 8 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

கடல் ஆமை கறி சாப்பிட்ட குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம் - 8 பேர் உயிரிழப்பு | 8 Children Die After Eating Sea Turtle Curry

இந்த சம்பவம் குறித்து மாவட்ட மருத்துவ அதிகாரி ஹாஜி பகாரி பேசியப்போது , உயிரிழந்தவர்கள் அனைவரும் கடல் ஆமை கறியை வாங்கி சாப்பிட்டு உள்ளனர் என மருத்துவ ஆய்வக பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. கடந்த செவ்வாய் கிழமை இந்த சம்பவம் நடந்தபோதும், திட்டு விழும் என்ற பயத்தில் இதுபற்றி அதிகாரிகளிடம் தெரிவிக்கப்படவில்லை.

பெற்றோரின் அலட்சியம்... 8 மாத குழந்தையின் உயிரை பறித்த வயர் - துயர சம்பவம்!

பெற்றோரின் அலட்சியம்... 8 மாத குழந்தையின் உயிரை பறித்த வயர் - துயர சம்பவம்!

நேர்ந்த சோகம்

இந்த சம்பவத்தில், முதியவர்களில் 78 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கடந்த 2023-ம் ஆண்டு மார்ச்சில் இதேபோன்றதொரு சம்பவம் நடந்தது.

கடல் ஆமை கறி சாப்பிட்ட குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம் - 8 பேர் உயிரிழப்பு | 8 Children Die After Eating Sea Turtle Curry

தான்சானியாவின் இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்த மாபியா தீவில் வேணி கிராம பகுதியில், கடல் ஆமை கறியை வாங்கி சாப்பிட்ட 7 பேர் உயிரிழந்தனர். 8 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். வேணி கிராமத்தின் தலைவர் ஜுமா கதிபு கூறும்போது,

மீனவர்களிடம் இருந்து கடல் ஆமை கறியை வாங்கி அவர்கள் சாப்பிட்டு உள்ளனர். அது விஷம் நிறைந்தது என சந்தேகிக்கப்படுகிறது என அவர் குறிப்பிட்டுருந்தார்.