7 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை - குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது நீதிமன்றம்
7 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு.
கரூரை அடுத்த ஆண்டாங்கோவில் கீழ் பாகத்தை சேர்ந்த 44 வயதான சண்முகவேல் கூலித்தொழிலாளி செய்து வருகிறார்.
இவர் கடந்த 2021-ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த 7 வயது சிறுவனை, அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சண்முகவேலுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது மகளிர் நீதிமன்றம்.
குற்றவாளி சண்முகவேல் 7 வயது சிறுவனை கடத்திச் சென்ற குற்றத்திற்கு 10 ஆண்டுகள் சிறையும்,பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறையும், ஆக மொத்தம் 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கரூர் மகிளா நீதிமன்ற நீதிபதி நசீமாபானு உத்தரவு பிறப்பித்தார்.