‘‘டீ கடை ராஜா நாங்க நாளைய இந்தியாதாங்க’’ : 7YearsOfBlockBusterVIP

dhanush vip 7years
By Irumporai Jul 18, 2021 01:27 PM GMT
Report

தனுஷ் நடித்து வெளியான வேலையில்லா பட்டதாரி படம் வெளியாகி ஏழு வருடம் ஆனதை ஒட்டி, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #7YearsOfBlockBusterVIP என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர் .

தனுஷின் பொல்லாதவன், ஆடுகளம், சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த வேல்ராஜ், முதன்முதலாக இயக்குநராக அறிமுகமான படம், ’வேலையில்லா பட்டதாரி .

இந்தப் படத்தை தனது வோண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் நடிகர் தனுஷ் தயாரித்து, நடித்தார். இதில் அமலாபால், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, விவேக், சுரபி உட்பட பலர் நடித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற அம்மா சென்டிமென்ட் பாடல் வாட் எ கருவாடு, ஊதுங்கடா சங்கு, வேலையில்லா பட்டதாரி ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட்டாயின.

குறிப்பாக பொறியியல் படித்து முடித்து , வேலையில்லாத பட்டதாரியாக நடித்திருந்திருந்த தனுஷின் நடிப்பும் எளிமையான கதையும் யதார்த்தமான திரைக்கதையும் விவேக்கின் காமெடியும் ரசிகர்களிடையே இந்தப் படத்தை கொண்டு சேர்த்தன.

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம், தனுஷை சிறந்த பாடலாசிரியராகவும் பெருமைபட வைத்தது.

இந்த நிலையில், இந்தப் படம் வெளியாகி இன்றோடு ஏழு வருடம் ஆனதை அடுத்து, #7YearsOfBlockBusterVIP என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.