கண் முன் தாயை வங்கி ஊழியர்கள் திட்டியதால் 7ம் வகுப்பு மாணவன் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்
குளச்சல், அஞ்சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் சசிக்குமார். இவருடைய மனைவி இந்திராணி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
சசிக்குமார் வெளிநாட்டில் தங்கி வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 22ம் தேதி, 7ம் வகுப்பு படிக்கும், இளைய மகன் ஷவின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஷவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், இந்திராணி தனியார் வங்கியில் லோன் வாங்கியுள்ளார்.
அந்த லோனை சரிவர கட்ட தவறியதால், வங்கி ஊழியர்கள் இந்திராணி வீட்டிற்கு வந்து இரு மகன்கள் முன்னிலையில் திட்டி அவமானப்படுத்தியுள்ளனர்.
இதனால், மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான ஷவின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.