ஈரோடு இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டி

Erode
By Thahir Feb 10, 2023 09:53 AM GMT
Report

ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்த 83 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில் 6 பேர் வாபஸ் பெற்றனர்.

வாபஸ் பெறும் நேரம் முடிந்தது 

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இருந்த ஈவெரா கடந்த மாதம் 4ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து இந்த தொகுதிக்கு பிப்ரவரி 27 இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதற்கு வேட்பு மனு தாக்கல் கடந்த 31ம் தேதி முதல் 7 ம் தேதி வரை நடைபெற்றது. இடைத்தேர்தலில் போட்டியிட 96 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர்.

77 candidates contest in Erode by-election

இதில் 83 பேரின் வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்நிலையில் வேட்புமனுவை வாபஸ் பெற இன்று (10.2.23) மாலை 3 மணி வரை காலக்கெடு கொடுக்கப்பட்ட நிலையில் மொத்தம் 6 பேர் திரும்ப பெற்றனர்.

இதையடுத்து 77 பேர் களத்தில் போட்டியிட உள்ளனர். இன்று மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளார் தேர்தல் நடத்தும் அலுவலர் வரும் 27ம் தேதி வாக்குப்பதிவு, மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.