என் தலைவருக்கு இந்த நிலைமையா? விஜயகாந்த்தை பார்த்து தேம்பி தேம்பி கதறி அழுத தொண்டர்கள்
75-வது சுதந்திர தினம்
நேற்று நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. நேற்று நாடு முழுவதும் உள்ள இந்தியர்கள் தங்களுடைய வீடுகளில் மூவர்ணக்கொடியை ஏற்றி 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடினர்.
உலக மக்கள் சமூகவலைத்தளங்களில் சுதந்திர தின விழா வாழ்த்துக்களை பதிவிட்டனர். இந்திய அரசியல் தலைவர்கள் தங்களுடைய அலுவலகங்களுக்கு சென்று இந்திய தேசிய கொடி ஏற்றி, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.
சமூகவலைத்தளங்களில் சினிமா நட்சத்திரங்கள், முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் ஒட்டுமொத்த இந்தியர்கள் அனைவரும் 75-வது சுதந்திர தின விழா வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.
பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நேற்று நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார்.
சென்னையில் நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை கோட்டை கொத்தளத்தில் ஏற்றுக் கொண்டார். முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் 2வது முறையாக இந்திய தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
விஜயகாந்த்தை பார்த்து கதறி அழுத தொண்டர்கள்
நேற்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவகத்திற்கு வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேசிய கொடியை ஏற்ற வண்டியில் மனைவி பிரேமலதாவோடு வந்தார். அப்போது, தொண்டர்கள் மத்தியில் மனைவி பிரேமலதா உதவி செய்ய விஜயகாந்த் தேசிய கொடியை ஏற்றினார்.
அப்போது, விஜயகாந்த்திற்கு வேன் கீழிருந்து ஒருத்தர் இனிப்பு கொடுத்தார். அதை விஜயகாந்த் வாங்கி அப்படியே கையில் வைத்துக்கொண்டிருந்தார். பின்னர் பிரேமலதா ஏதோ அவர் காதில் சொல்ல பின்னர் மாஸ்க் எடுத்து குழந்தைப்போல் சாப்பிட்டு மறுபடியும் ஏதும் பேசாமல் மாஸ்க் போட்டுக் கொண்டு வண்டியில் உட்கார்ந்தபடியே சென்றார்.
தொண்டர்களை பார்த்து எப்போதும் உற்சாகத்தோடு கையசைத்து, கம்பீரமாக பேசும் அவர் நேற்று ஏதும் பேசாமல், அமைதியாக வண்டியில் உட்கார்ந்து சென்றது தொண்டர்கள் மத்தியில் கவலையை கொடுத்தது. என் தலைவருக்கு இந்த நிலைமையா என்று தொண்டர்கள் விஜயகாந்த்தை பார்த்து அழுதனர்.