நியூயார்க்கில் ஜொலி ஜொலித்த இந்திய தேசிய கொடி - வைரலாகும் வீடியோ

Independence Day Viral Video New York
By Nandhini Aug 16, 2022 09:04 AM GMT
Report

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தில் தேசியக் கொடி காட்சிப்படுத்தப்பட்டது.

75-வது சுதந்திர தினம்

நேற்று நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. நேற்று நாடு முழுவதும் உள்ள இந்தியர்கள் தங்களுடைய வீடுகளில் மூவர்ணக்கொடியை ஏற்றி 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடினர்.

உலக மக்கள் சமூகவலைத்தளங்களில் சுதந்திர தின விழா வாழ்த்துக்களை பதிவிட்டனர். இந்திய அரசியல் தலைவர்கள் தங்களுடைய அலுவலகங்களுக்கு சென்று இந்திய தேசிய கொடி ஏற்றி, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

சமூகவலைத்தளங்களில் சினிமா நட்சத்திரங்கள், முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் ஒட்டுமொத்த இந்தியர்கள் அனைவரும் 75-வது சுதந்திர தின விழா வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.

பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நேற்று நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார்.

சென்னையில் நேற்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை கோட்டை கொத்தளத்தில் ஏற்றுக் கொண்டார். முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் 2வது முறையாக இந்திய தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

நேற்று வண்ணமயமாக காட்சியளித்த அம்பானி வீடு

நேற்று 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீடு வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன. வண்ண விளக்குகளால் ஜொலி ஜொலித்த அம்பானியின் இல்லத்தை அப்பகுதியில் சென்றவர்கள் வியப்புடன் பார்த்துவிட்டுச் சென்றனர்.

independence day

நியூயார்க்கில் ஜொலி ஜொலித்த இந்திய தேசியக் கொடி

நேற்று இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தில் தேசியக் கொடி காட்சிப்படுத்தப்பட்டது.

இது குறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.