உங்க வண்டி எண் 75ஆ - அப்போ உங்களுக்கு பெட்ரோல் இலவசம்!
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்குகளில் 75 என்ற பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு 75 ரூபாய் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் 75-வது சுதந்திர தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் 75-வது சுதந்திர தினத்தையொட்டி வாடிக்கையாளர்களுக்கு சலுகை வழங்கியுள்ளது.
அதாவது இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் நிரப்ப வரும் வாகனங்களின் பதிவு எண் 75 என இருந்தால் அந்த வாகனங்களுக்கு 75 ரூபாய் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி வாகனத்தின் பதிவு எண்ணில் முதல் இரண்டு எண்கள் 75 அல்லது கடைசி இரண்டு எண்கள் 75 என்று இருக்கும் வாகனங்கள் பெட்ரோல் போட வந்தால் அந்த வாகனங்களுக்கு 75 ரூபாய் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டு வருவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
அதன்படி, நாமக்கல்லில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்குகளில 75 ரூபாய் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.