35 வயது பெண்ணை மறுமணம் செய்த 75 வயது முதியவர் மறுநாளே உயிரிழப்பு
மறுமணம் செய்த 75 வயது முதியவர் மறுநாளே உயிரிழந்துள்ளார்.
மறுமணம் செய்த 75 வயது முதியவர்
உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள குச்முச் கிராமத்தை சேர்ந்தவர் 75 வயதான சங்ருராம்.
கடந்த ஆண்டில் இவரது மனைவி உயிரிழந்துள்ளார். குழந்தைகள் யாரும் இல்லாத நிலையில், தனியாக வசித்து வந்துள்ளார். விவசாயம் செய்து தனது வாழ்வை நடத்தி வந்துள்ளார்.
ஒரு வருடமாக தனிமையில் வசித்து வந்த நிலையில், கடந்த செப்டெம்பர் 29 ஆம் தேதி 35 வயதான மன்பவதி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
மறுநாளே உயிரிழப்பு
அந்த பெண்ணுக்கும் இது இரண்டாவது திருமணமாகும். அவருக்கு முந்தைய கணவரிடமிருந்து 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்த திருமணத்திற்கு முதியவர்களின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திருமணம் முடிந்த மறுநாள் காலையிலே முதியவர் உயிரிழந்துள்ளார்.
இந்த உயிரிழப்பில் சந்தேகமடைந்துள்ள அவரது உறவினர்கள், டெல்லியில் இருந்து தாங்கள் வரும் வரை இறுதிச்சடங்கு மேற்கொள்ள கூடாது என தெரிவித்துள்ளனர்.