உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.75 லட்சம் பணம் பறிமுதல்
சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.75 லட்சம் ரொக்க பணத்தை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ரூ.75 லட்சம் ரொக்கம் பறிமுதல்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை வழக்கம் போல் ரயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, சந்தேகப்படும் படியாக சுற்றி வந்த 2 வாலிபர்களை போலீசார் அழைத்து விசாரித்துள்ளனர். பின்னர் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த ரயில்வே போலீசார் அவர்கள் கொண்டு வந்த பேக்கை சோதனை செய்துள்ளனர். அப்போது பேக்கில் ரூ.75 லட்சம் ரொக்க பணம் இருந்துள்ளது.
இதையடுத்து பணம் எதற்காக எடுத்து வரப்பட்டது. ஆவணங்கள் இருக்கிறதா என கேட்ட போது வாலிபர்கள் ஆவணங்கள் இல்லை என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து பணத்தை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் விசாரணையில் இரண்டு வாலிபர்களும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.பணத்தை வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க ரயில்வே போலீசார் முடிவு செய்துள்ளனர்.