74வது குடியரசு தினம் : வரவேற்ற முதலமைச்சர் .. கொடியேற்றிய தமிழநாடு ஆளுநர் ரவி
4வது குடியரசு தினத்தையொட்டி, மூவர்ண தேசியக் கொடியை ஏற்றினார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி.
நாடு முழுவதும் இன்று 74வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றதுஇதற்கு டெல்லி செங்கோட்டை முதல் தமிழ்நாடு மெரினா கடற்கரை வரை மத்திய மாநில அரசுகள் ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வந்துள்ளது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் காலை 8 மணியளவில் கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே கொடியேற்றினார் ஆளுநர் ரவி
குடியரசு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சென்னை கடற்கரை சாலையில் காந்தி சிலை அருகே கவர்னர் தேசியக்கொடி ஏற்றுவது வழக்கம்.
தற்போது அந்த இடத்தில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருவதால் கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே கொடியேற்று விழா நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு தமிழக ஆளுநர் ரவியை மலர்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் அரசு மரியாதையினை ஏற்று ஆளுநர் ரவி கொடியேற்றினார்.