74-வது குடியரசு தினம்: சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்

Google
By Irumporai Jan 26, 2023 02:08 AM GMT
Report

74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.

74 வது குடியரசு தினம்

நாட்டின் 74 வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகின்றது, ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள ராஜபாதையில் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு சென்டிரஸ் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கடமையின் பாதையில் (முன்பு ராஜபாதை) குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது.

ஜனாதிபதி கொடியேற்றுவார்

ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றுகிறார். விழா காலை 8 மணிக்கு தொடங்குகிறது. அணிவகுப்பு, கடமையின் பாதையில் ஜனாதிபதி மாளிகை அருகே தொடங்கி விஜய் சவுக், இந்தியா கேட் வழியாக செங்கோட்டை வரை செல்லும்.

74-வது குடியரசு தினம்: சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள் | 74Th Republic Day Google Releases Special Doodle

 சிறப்பு டூடுல்

இந்த நிலையில் இணைய தேடு பொறி நிறுவனங்களில் முதன்மை நிறுவனமான கூகுள் நிறுவனம், தனது டூடுல் அமைப்பை அந்த நாளின் சிறப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வருகின்றது.

அந்த வகையில் உலகின் மிக பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் குடியரசு தினவிழாவினை பிரதிபலிக்கும் வைகயில் கூகுள் நிறுவனம் தனது டூடுல் அமைப்பை மாற்றி உள்ளது.