கடும் பனிப்பொழிவிலும் தேசிய கொடி ஏந்தி குடியரசு தின வாழ்த்து தெரிவித்த ராணுவ வீரர்கள்

Army Indian Republic Day Soldier Wishes 73th
3 மாதங்கள் முன்

நாடு முழுவதும் குடியரசு தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மெரினாவில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாட்டின் 73-வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்படுகிறது.

தலைநகர் டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு ராஜபாதையில் தொடங்கி இந்தியா கேட் பகுதி வரை நடக்கிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வார்.

சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கு பதக்கங்களையும் வழங்குவார். விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் ராணுவ வீரர்கள் கடும் பனிப்பொழிவிலும் வெந்நிற ஆடை அணிந்து கையில் தேசிய கொடி ஏந்தியவாறு நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்து தெரிவித்தனர். 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.