உயிரைக் காக்க போராடிய காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு அண்ணா விருது - முதலமைச்சர் வழங்கினார்
இந்திய திருநாட்டின் 73வது குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக் கொடியை ஏற்றினார்.
ஆளுநர் தேசிய கொடியை ஏற்றி வைத்த போது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது. இதனையடுத்து, ஆளுநர் , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முப்படைகளின் அணிவகுப்பு, டெல்லி குடியரசு தின அணிவகுப்பிற்காக அனுப்பப்பட்டு மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து சென்னை கடற்கரை சாலையில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தின்போது வீரதீர செயல் புரிந்த காவல்துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்கி சிறப்பித்தார்.
இந்நிலையில், குடியரசு தின விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உயிருக்கு போராடியவரை தோளில் தூக்கி சென்ற கீழ்ப்பாக்கம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கி சிறப்பு செய்தார்.