73 வயது பாட்டியை வீட்டிற்கே தேடிச்சென்ற பொலிசார்: எதற்காக தெரியுமா?

Kerala
By Fathima Feb 16, 2026 07:45 AM GMT
Report

கேரளாவில் 73 வயது பாட்டி பார்வதியை வீட்டிற்கே சென்று கௌரவப்படுத்தியுள்ளனர் பொலிசார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரளாவில் நடந்த சம்பவத்தின் வீடியோ வைரலானது.

அதில் நபர் ஒருவர் நடைபாதையில் ஸ்கூட்டரை ஓட்டிச்செல்ல அதை தைரியமாக தடுத்த பாட்டி, சாலையில் செல்லுமாறு கூறுகிறார்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பாட்டியின் செயலை பலரும் பாராட்டினர், பாட்டியின் தைரியத்துக்கு ஆதரவாக கமெண்டுகள் குவிந்தன.

73 வயது பாட்டியை வீட்டிற்கே தேடிச்சென்ற பொலிசார்: எதற்காக தெரியுமா? | 73 Year Old Kerala Woman Honoured

இந்நிலையில் பாட்டியின் வீட்டிற்கு சென்ற வாகனத்துறை பொலிஸ் அதிகாரிகள் பாரம்பரிய சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினர்.

நடைபாதையில் வந்தவர், தனக்கு வழிவிட கூற ”நான் எங்கே நடந்து செல்வது? சாலையிலா? நடைபாதை என்பது பாதசாரிகள் நடப்பதற்கே, வாகனங்கள் செல்ல அல்ல” என பதிலளித்துள்ளார்.

குறித்த நபர், எனக்கு வாகனசட்டங்கள் சொல்லித்தருகிறீர்களா? என கேட்டுள்ளார்.

இச்சம்பவத்தை அடுத்து குறித்த நபரின் லைசென்ஸ் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.