“72 வயதில், குழந்தையை போல கயிற்றில் தொங்கியப்படி பாட்டிம்மா செய்த சாகசம்” - வைரலாகும் வீடியோ பதிவு
கேரளாவில் 72 வயதான பாட்டி ரோப் கயிற்றில் ஆனந்தமாக தொங்கியபடி சென்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கேரளாவில், தனது முதிர்ந்த வயதிலும் குழந்தையை போல, பதின்ம வயது பருவத்தினரைப் போல ஜிப்-லைனில் ரோப் கயிறில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அந்தரத்தில் தொங்கியபடி,
வயதான பெண்மணி ஒருவர் சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெரும்பாலும் இளைஞர்களே இதுபோன்ற சாகச விளையாட்டுக்களில் ஈடுபடுவார்கள் என்ற பிம்பத்தை தற்போது இந்த வயதான பெண்மணி உடைத்துள்ளார்.
கேரளாவின் பாலக்காட்டில் உள்ள பிரபல பூங்காவிலும் இந்த ஜிப் லைன் ரோப் வசதி உள்ளது. அந்த ஜிப் லைனில் 72 வயது மதிக்கத்திக்க பாட்டி ஒருவர் பாதுகாப்பு பெல்டும், தலைகவசமும் அணிந்து கொண்டு செல்கிறார்.
சேலை அணிந்து கொண்டு ரோப்கயிறை இறுக்கப் பற்றிக்கொண்டு அந்த வயதான பாட்டி அந்தரத்தில் சறுக்கியபடி செல்லும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அவ்வாறு சென்ற பிறகு, ரோப் கயிற்றில் இருந்து இறங்கிய பாட்டி ஆனந்தத்தில் சிரிப்பதுபோல அந்த வீடியோ முடிக்கப்பட்டுள்ளது.
யாத்ரா பிரேமிகல் என்ற இன்ஸ்டாகிராம் நபர் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.