Sugar, BP எதுவும் கிடையாது, 50 வருஷமா உடற்பயிற்சி செய்றேன் : 70 வயது ஆணழகனின் கதை
சோதனைகளை கடந்து சாதனைகள் பல படைக்க வயது ஒரு தடையில்லை என்பதை மெய்பிக்கும் விதமகா பலவேறு நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் உள்ளது.
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம். 72 வயதான நிலையில் மதுராந்தகம் பகுதியிலேயே உடற்பயிற்சிக் கூடம் ஒன்றினை வைத்து நடத்தி வருகிறார். சிறுவயது முதலே உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்ட ரத்தினம், தொடர்ந்து உடற்பயிற்சி செய்து இந்த வயதிலும் கட்டுடலுடன் காணப்படுகிறார்.
பல போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் தற்போது ஆசிய அளவில் நடைபெறும் ஆணழகன் போட்டிக்கு 60 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் இந்தியாவின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னதாக, மே மாதம் 22ஆம் தேதி இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்வில் பங்கு கொண்டு தேர்ச்சிபெற்றுள்ளார்.
தொடர்ந்து, வரும் ஜூலை 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை மாலத்தீவில் நடைபெறும் 54ஆவது ஆசிய ஆணழகன் போட்டியில் கலந்துகொள்கிறார் இந்த நிலையில் சாதிக்க வயது ஒரு தடையில்லை என்பதை மெய்பித்து வெற்றி எனும் சிகரத்தை நோக்கி செல்லும் ரத்தினத்தின் நேர்காணல் உங்களுக்காக