72 வயதில் 20 வயது இளம்பெண்ணுடன் திருமணம்
Malaysia
By Fathima
மலேசிய முன்னாள் தேசிய கால்பந்தாட்ட வீரர் ஒருவர் தனது 72 வது வயதில் 20 வயது இளம்பெண்ணை கரம்பிடித்துள்ளார்.
மலேசிய முன்னாள் தேசிய கால்பந்தாட்ட வீரர் டத்தோக் அப்தா அலிப்(வயது 72). சமீபத்தில் இவருக்கும் 20 வயது இளம்பெண்ணுக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இதை அவரது தம்பி ஊடகங்களில் வெளியிட வைரலாகி வருகிறது.
இதுகுறித்து அவரது தம்பி யூனுஸ், ஆகஸ்ட் 27ம் தேதி இரு குடும்பங்களின் ஒப்புதலுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. தம்பதிகள் சந்தோஷமாக வாழ பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.
1970, 80 களில் மலேசியா கால்பந்தாட்ட அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்தவர் டத்தோக் அப்தா அலிப் என்பது குறிப்பிடத்தக்கது.
