10 மாதங்கள் தொடர் சிகிச்சை... 43 முறை நெகட்டிவ்.. கொரோனாவுக்கு டஃப் கொடுத்த முதியவர்!

By Irumporai Jun 24, 2021 02:56 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

பிரிட்டன் நாட்டை சேர்ந்த டேவ் ஸ்மித் என்பவருக்கு,43 முறை கொரோனா பாசிடிவ் என வந்தும் 10 மாத தொடர் போராட்டத்துக்குப் பின்னர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளார்.

பிரிட்டனில் வசிக்கும் ஓய்வுபெற்ற ஓட்டுநர்  72 வயது முதியவர் டேவ் ஸ்மித்.

இவர் கடந்த 10 மாதங்களில் 43 முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு10 மாத சிகிச்சைக்குப் பிறகு,44 வது முறை கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என வந்து,தற்போது  கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளார்.

தனது வாழ்க்கையில் நடந்த இந்த நிகழ்வு குறித்து க்ஸ்மித் செய்தியாளருக்கு அளித்திருக்கும் பேட்டியில்:

"நான் உயிர் பிழைப்பேன் என நானே நம்பவில்லை.என் குடும்பத்தினரை எல்லாம் அழைத்து,அவர்களை சமாதானப்படுத்தினேன்.எனக் கூறினார்.

மேலும் டேவ் ஸ்மித்திற்கு சிகிச்சை அளித்த பிரிஸ்டால் அறக்கட்டளையை சேர்ந்த தொற்று நோய்  மருத்துவர் எட் மோரான் கூறுகையில்: "அவர் உடலில்,கொரோனா வைரஸ் தொடர்ந்து இருந்துக்கொண்டேதான் இருந்தது. அது அழியவே இல்லை.

அவருக்கு அமெரிக்க பயோடெக் நிறுவனமான ரெஜெனெரான் உருவாக்கிய செயற்கை ஆன்டிபாடிகளின் காக்டெய்ல் மூலம் சிகிச்சையளித்தோம்.

பின்னர் ஸ்மித் குணமானார் என தெரிவித்தார், இதன்மூலம் உலகிலேயே அதிக நாட்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவராக டேவ் ஸ்மித் கருதப்படுகிறார்.