72 வயது மூதாட்டியை துடிக்க துடிக்க பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் - அதிர்ச்சி சம்பவம்
திருப்பூர் மாவட்டம், உடுமலை, திருமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் தேங்காய் மண்டியில் கூலிவேலை செய்து வருகிறார்.
ரமேஷூக்கு குடிப்பழக்கம் உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த புவன லட்சுமி (72) என்ற மூதாட்டி தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக ரமேஷ், அந்த மூதாட்டியை நோட்டமிட்டு வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அளவுக்கு அதிகமாக ரமேஷ் குடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
அப்போது, யாரும் இல்லாத நேரம் பார்த்து புவன லட்சுமி மூதாட்டி வீட்டிற்கு நுழைந்து கதவை தட்டியுள்ளார். கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்தார் மூதாட்டி.
அந்நிலையில், வீட்டிற்குள் புகுந்த ரமேஷ் மூதாட்டியிடம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மூதாட்டி கதறி துடித்தும், அதையெல்லாம் கண்டுக்காமல் மூதாட்டியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் வரவே, ரமேஷ் அவ்விடத்தை விட்டு ஓடிவிட்டார். இதனையடுத்து, அக்கம், பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மூதாட்டியின் நிலைமையை அறிந்த மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மருத்துவமனையில் மூதாட்டியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
மூதாட்டி கொடுத்த தகவலின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த போலீசார், ரமேஷை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.