நீங்கள் முஸ்லிம்கள், இறக்கவேண்டும்.. 6 வயது சிறுவனை 26 முறை கத்தியால் குத்தி கொன்ற முதியவர் - கொடூரம்!
முஸ்லிம் என்பதால் 6 வயது சிறுவனை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதியவர் செய்த காரியம்
அமெரிக்கா சிகாகோ பகுதியில் 32 வயதான முஸ்லிம் பெண் ஒருவர் வாழ்ந்து வருகிறார். இவருக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார், இவர்கள் இருவரும் தங்களது வீட்டில் இருந்துள்ளனர். அப்பொழுது வீட்டு உரிமையாளரான 71 வயதான ஜோசப் ஜூபா என்பவர் அவரது வீட்டின் கதவை தட்டியுள்ளார்.
அந்த பெண் கதவை திறந்ததும், அவரது கழுத்தை நெரித்து மூச்சுத்திணற வைத்துள்ளார். அந்த பெண் மற்றும் அவருடைய மகனை ஆயுதம் கொண்டு தாக்கியுள்ளார். இதில், இருவரின் மார்பு, உடல் மற்றும் மேல் பகுதிகளில் கத்தி குத்து காயங்கள் ஏற்பட்டுள்ளன.
கொடூரக்கொலை
இந்நிலையில், அந்த முதியவர் சிறுவனின் உடலில் கத்தியால் 26 முறை குத்தி காயம் ஏற்படுத்தியுள்ளார். இதனால் அந்த சிறுவர் உயிரிழந்தார். அந்த சிறுவன் பாலஸ்தீனிய அமெரிக்கன் என அமெரிக்க மற்றும் இஸ்லாமிய உறவுகளுக்கான கவுன்சில் தெரிவித்துள்ளது. அவர்கள் முஸ்லிம் என்பதால் இவர் குத்தி கொலை செய்தது தெரியவந்தது.
சம்பவ இடத்தில் ஜோசப் நெற்றியில் காயத்துடன் வீட்டின் வாசல் பகுதியில் தரையில் அமர்ந்த நிலையில் போலீசார் அவரை பிடித்தனர். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர், பின்னர் அவருக்கு எதிராக வெறுப்புணர்வு, கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவாகிள்ளது.
அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார், அவர் தனது கணவருக்கு அனுப்பிய மெசேஜில் "நீங்கள் முஸ்லிம்கள், இறக்க வேண்டும்" என தாக்குதலின்போது ஜோசப் ஆவேசத்துடன் கூறியுள்ளார் என்று தெரியவந்தது.