இப்படி ஒரு பேரழிவை கண்டதில்லை...ஹிமாச்சல பிரதேச முதல்வர் வருத்தம்
ஹிமாச்சல பிரதேச நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி, இது வரை 71 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.
தொடரும் கனமழை, நிலச்சரிவு
தென்மேற்கு பருவமழை காரணமாகக் ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கடந்த சில காலமாகவே கனமழை பெய்து வருகிறது. திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பு போன்ற செயல்களால் குறிப்பிட்ட அளவை தாண்டி மழை அதிகளவில் பெய்துள்ளது.

இதன் காரணமாக மாநிலமே பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்திலுள்ள சிம்லாவின் ஃபகில் சம்மர் ஹில் போன்ற பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.
71-ஐ கடந்த உயிரிழப்பு

கனமழை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட பல சாலைகள் மூடப்பட்டுள்ளன. மாநிலத்தின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஃபகில் சம்மர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக 57 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த கனமழை நிலச்சரிவின் காரணமாக இது வரை 71 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது வரை பார்க்காத பேரழிவு

இந்நிலையில் மீட்பு பணிகள் பார்வையிட்ட அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, தலைநகர் சிம்லாவில் மீட்பு பணிகளுக்காக ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது என தெரிவித்து, கனமழையால் மாநிலத்துக்கு இதுவரை ரூ.10,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் மாநிலத்தின் உள்கட்டமைப்பை மீண்டும் மேம்படுத்துவதற்கு ஓர் ஆண்டு ஆகும்" என கூறினார்.
யாழில் ஆலயம் செல்ல தனியாரின் காணிக்குள் பாதை அமைக்கும் இராணுவம் : காணி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு IBC Tamil
அதிகரிக்கும் பதற்றம் : ஈரானை நெருங்கியது அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பல் IBC Tamil
கிவுல் ஓயா திட்டமும் இன அழிப்பு நடவடிக்கை...இதனை நிறுத்துவது தமிழ் மக்களின் கூட்டுப் பொறுப்பாகும்..! IBC Tamil