ஒரு ஊரையே நடுங்கவிட்ட மரண ஓலம்.. ஆற்றில் சிதறி கிடந்த 71 பேரின் உடல்கள் - நடந்தது என்ன?
வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 71 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எத்தியோப்பியா
கிழக்கு ஆப்பிரிக்கா நாடான எத்தியோப்பியாவில் உள்ள கிராம மக்கள் பலர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சரக்கு வாகனத்தை வாடகைக்கு எடுத்துச் சென்றுள்ளனர் அதில் அளவுக்கு அதிகமானவர்கள் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சிடாமா தலைநகர் அடிஸ் அபாபாவிற்கு அருகே உள்ள நதியில் சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பழைய சரக்கு வாகனம் வேகமாகத் தடுப்புகளை இடித்துக் கொண்டு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், இதுவரை 71 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டனர். மேலும் உயிரிழந்தவர்களை மீட்கும் பணி நடைபெற்றது.
71 பேர் பலி
இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் வாகனம் கவிழ்ந்தபோது நதியிலிருந்த பெரிய பாறைகள் மீது மோதியதில் இவ்வளவு பேர் உயிரிழக்கக் காரணம் எனத் தெரிவித்தனர்.
முன்னதாக அதிகம் மக்கள் தொகை கொண்ட எத்தியோப்பியாவில் சாலைகள் மோசமாகப் பராமரிக்கப்படுவதால் இது போன்ற சாலை விபத்துக்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.