“ஸ்வீட் எடு ... கொண்டாடு” - குஜராத்தில் 70 வயதில் குழந்தை பெற்ற பாட்டி

குழந்தை பெற்ற பாட்டி
By Petchi Avudaiappan Oct 20, 2021 08:17 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

குஜராத்தில் 70 வயது மூதாட்டி தன் முதல் குழந்தையை பெற்றெடுத்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியைச் சேர்ந்த வால்ஜிபாய் ரபாரி - ஜிவுன்பென் ரபாரி தம்பதிக்கு திருமணமாகி 45 ஆண்டுகள் ஆன நிலையில், குழந்தை இல்லாத சோகத்தில் வாழ்ந்து வந்தனர். இதனிடையே செயற்கை கருவூட்டல் மூலம் குழந்தை பெற்றெடுக்க அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி புஜ் பகுதியில் உள்ள பிரபல செயற்கை கருவூட்டல் மருத்துவமனையை அணுகியபோது இந்த வயதில் குழந்தை பெற்றெடுப்பது மிகவும் ஆபத்தானது என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். 

ஆனால் இறப்பதற்கு முன் ஒரு குழந்தைக்கு தாயாக விரும்புகிறேன் என ஜிவுன்பென் ரபாரி தெரிவிக்க அவருக்கு மீண்டும் மாதவிடாய் ஏற்படுவதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.வயது காரணமாக சுருங்கிய கர்ப்பப்பை அறுவை சிகிச்சையால் விரிவுபடுத்தப்பட்டது. இவ்வாறு சில மாதங்கள் நடந்த சிகிச்சைகளுக்குப் பின் செயற்கை முறையில் கருவூட்டல் நடந்தது.

இந்த வயதில் அதுவும் முதல் முயற்சியிலேயே, அந்த முதிய தம்பதிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில்  அதற்கு லாலோ என அதற்கு பெயரிட்டுள்ளனர்.