நிகழ்ச்சிக்கு போனது ஒரு குத்தமா? 70 பேர் மருத்துவமனையில் அனுமதி

Kerala
By Thahir Jan 01, 2023 05:05 PM GMT
Report

கேரளாவில் மலப்பள்ளி மாவட்டத்தில் ஞானஸ்நான நிகழ்ச்சி ஒன்று கடந்த வாரம் நடந்துள்ளது. இதில், 190 பேர் வரை கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சிக்கு கேட்டரிங் நிறுவனம் ஒன்று உணவு வினியோகம் செய்துள்ளது. இதனை சாப்பிட்ட அனைவரும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கிற்கு ஆளாகி உள்ளனர்.

நிகழ்ச்சிக்கு போனது ஒரு குத்தமா? 70 பேர் மருத்துவமனையில் அனுமதி | 70 People Admit Hospital

அவர்களில் 70 பேர் அதிக அளவில் வாந்தி எடுத்து, வயிற்று வலியால் அவதிப்பட்டு உள்ளனர். அவர்கள் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

எனினும், பத்தனம்திட்டா மாவட்டத்தில் பருமலா பகுதியில் அதே நாளில் வேறு இரண்டு இடங்களில் நாங்கள் உணவு வினியோகித்தோம். இதுபோன்ற புகார்கள் எதுவும் வரவில்லை என கேட்டரிங் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

ஆனால், தரமற்ற உணவு வழங்கியது பற்றி அந்நிறுவனம் மீது புகார் அளிக்கப்படும் என நிகழ்ச்சியை நடத்திய குடும்பத்தினர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர்