Thursday, May 1, 2025

70 மணிநேர வேலை; மீண்டும் வெடித்த சர்ச்சை - நச்னு.. பதிலடி கொடுத்த பெண் சிஇஓ!

Infosys India N.r. Narayana Murthy
By Sumathi 4 months ago
Report

70 மணி நேர வேலை குறித்த கருத்துக்கு சிஇஓ நமீதா தாபர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

70 மணி நேர வேலை

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என்.ஆர்.நாராயண மூர்த்தி. இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

infosys narayana murthy

இவருடைய கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், அசாதாரண சாதனைகளுக்காக பாடுபடுபவர்களுக்கு கடிகார நேரம் என்பது வெற்றியின் அளவீடு அல்ல எனக் கூறி நாராயணமூர்த்தியின் 70 மணி நேர வேலை குறித்த கருத்துக்கு ஆதரவாக Shaadi.com நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அனுபம் மிட்டல் பதிலளித்திருந்தார்.

தற்போது இந்த கருத்துக்கு Emcure Pharmaceuticals நிறுவனத்தின் சிஇஓ நமீதா தாபர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “பெரிய நிறுவனங்களில் டன் கணக்கில் பணம் ஈட்டும் நிறுவனத் தலைவர்கள், தலைமைப் பொறுப்புகளில் இருப்பவர்கள் வேண்டுமானால் வாரம் 70 மணி நேரம் வேலை செய்யட்டும்.

PF ​​வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் நியூஸ் - வங்கிக் கணக்கில் வரும் ரூ.15 ஆயிரம்

PF ​​வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் நியூஸ் - வங்கிக் கணக்கில் வரும் ரூ.15 ஆயிரம்

சிஇஓ நமீதா பதிலடி

கடைசிவரை தினசரி 24 மணிநேரம்கூட வேலை செய்யட்டும். ஆனால், அதையே குறைந்த ஊதியம் வாங்கும் ஊழியர்களிடம் எதிர்பார்ப்பது நியாயமற்றது. இன்று என் கணக்காளர் என்னிடம் சம்பளம் வாங்குகிற போதும் என்னிடம் இருக்கும் சொத்து மதிப்பு அவரிடம் இல்லை.

நமீதா தாபர் - அனுபம் மிட்டல்

அதற்காக அவர் ஏன் இத்தனை மணிநேரம் உழைக்க வேண்டும்? ஒருவேளை, அவர் அப்படி உழைத்தால், அதனால் அவருக்கு கடுமையான உடல் மற்றும் மனநலப் பிரச்னைகளை ஏற்படுத்தும். என்றாலும், சிலசூழ்நிலைகளில் நீண்டநேரம் உழைக்க வேண்டியதும் தவிர்க்க முடியாததாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.