7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவர்!! அதிர்ச்சி சம்பவம்!

arrest abuse oldman 7 year girl
By Anupriyamkumaresan Aug 10, 2021 10:08 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

பெரம்பலூர் அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் சித்தளி கிராமத்தை சேர்ந்த 51 வயதான கோவிந்தராஜ் விவசாயியாக இருக்கிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த உறவினரின் 7 வயது மகளை, தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

மேலும், இதனை வெளியே கூறினால் கொன்று விடுவதாகவும் சிறுமியை மிரட்டி உள்ளார். இந்த நிலையில், வீட்டிற்கு திரும்பிய சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதை கண்ட பெற்றோர், இதுகுறித்து அவரிடம் விசாரித்தனர்.

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவர்!! அதிர்ச்சி சம்பவம்! | 7 Year Girl Abuse By Oldman Perambalur

அப்போது, சிறுமி தனக்கு நிகழ்ந்த கொடுமையை கூறி கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் பேரில், கோவிந்தராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த மகளிர் போலீசார், அவரை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.