உலகின் சூரியன் மறையாத இடங்கள் இருக்கு தெரியுமா - அரிய தகவல்!
உலகில் சூரியன் மறையாத 7 இடங்கள் உள்ளன.
மிட் நைட்
பூமியின் சுழற்சி மற்றும் அச்சின் சாய்வின் காரணமாக ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் வட்டாரங்களில் சூரியன் தொடர்ந்து பிரகாசிக்கும். இதனை மிட் நைட் என்று அழைக்கின்றனர்.
நார்வேயின் பல பகுதிகளில் மே முதல் ஜூலை வரை சூரியன் மறையாது. சுமார் 76 நாட்களுக்கு இரவே இருக்காது. ஸ்வீடனில் சுமார் 60 நாட்களுக்கு சூரிய மறைவே இருக்காது.
கனடாவின் நுனாவட் மற்றும் யூகான் பகுதிகளில் கோடை காலத்தில் சூரியன் மறையாது. சுமார் 60 முதல் 100 நாட்கள் வரை பகுதிக்கேற்ப சூரிய மறைவு இருக்காது. அலாஸ்காவில் சுமார் 82 நாட்களுக்கு சூரியன் மறையாது.
பின்லாந்தில் 60 முதல் 70 நாட்களுக்கு சூரிய மறைவே இருக்காது. மேலும், இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய நாடுகளிலும் இந்த நிகழ்வு வானிலைக்கு தகுந்தாற்போல இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.