லட்டு வாங்க சென்ற 7 பேர் உயிரிழப்பு - மத நிகழ்வில் நடந்த சோகம்
லட்டு வழங்கும் நிகழ்வில் மேடை சரிந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
லட்டு மஹோத்சவ்
உத்தரபிரதேச மாநிலம் பாக்பத்தில் ஜெயின் சமூகத்தினர் கடந்த 30 ஆண்டுகளாக ஜைன மதத்தின் கடவுளான ஆதிநாதருக்கு லட்டு வழங்கும் 'லட்டு மஹோத்சவ்' என்ற நிகழ்வை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு இன்று லட்டு மஹோத்சவ் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக மூங்கில் கம்புகளால் ஆன மேடை அமைக்கப்பட்டிருந்தது.
7 பேர் உயிரிழப்பு
இந்நிலையில், பக்தர்கள் மற்றும் ஜெயின் துறவிகள் மேடையில் இருந்து போது திடீரென மேடை சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
Major accident during the Lord Aadinath "Nirvan Ladoo event" in Baraut area in UP's Baghpat district. Several feared trapped and injured after a makeshift wooden log structure at Manstambh premises collapsed.
— Piyush Rai (@Benarasiyaa) January 28, 2025
Warning: Disturbing video. pic.twitter.com/2DTcSuhhKG
இது குறித்து தகவலறிந்த மீட்புப்படையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, மீட்பு பணிகளை துரிதப்படுத்துமாறு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார்.