கொடூர பெண் சீரியல் கில்லர்; 3 ஆண்டுகளில் 7 கொலைகள் - நீதிமன்றம் விதித்த தீர்ப்பு?

China Crime Death World
By Jiyath Dec 19, 2023 08:45 AM GMT
Jiyath

Jiyath

in சீனா
Report

மரண தண்டனை 

சீனாவை சேர்ந்த லாவோ ராங்சி (49) என்ற பெண்ணை கடந்த 20 ஆண்டுகளாக போலீசார் தேடி வந்துள்ளனர். 1996 முதல் 1999 வரை இவர் கொள்ளை, மிரட்டி பணம் பறித்தல், 7 பேர் கொடூர கொலை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டிருந்தார்.

கொடூர பெண் சீரியல் கில்லர்; 3 ஆண்டுகளில் 7 கொலைகள் - நீதிமன்றம் விதித்த தீர்ப்பு? | 7 Murders In 3 Years Female Serial Killer In China

பெண் சீரியல் கில்லராக வளம் வந்த லாவோவை கடந்த 2019ம் ஆண்டு போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணையில் லாவோவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து நீதிமன்றம் வெளியிட்ட செய்தியில் "உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டதும் திங்கட்கிழமை காலையில் லாவோவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது" என்று தெரிவித்துள்ளது.

நீதிமன்றம் அதிரடி 

லாவோவுக்கு எதிரான விசாரணையின் போது கொள்ளை சம்பவங்களுடன் நிறுத்தி கொண்டார் என்றும் கொலை சம்பவங்களுக்கு முன்னாள் காதலரான பா ஜியிங்கே காரணம். சிறிய அளவிலேயே அவர் பங்காற்றினார்.

கொடூர பெண் சீரியல் கில்லர்; 3 ஆண்டுகளில் 7 கொலைகள் - நீதிமன்றம் விதித்த தீர்ப்பு? | 7 Murders In 3 Years Female Serial Killer In China

காதலருக்கு உதவியாகவே செயல்பட்டார் என லாவோவின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர். மேலும் லாவோ, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் அழுதபடி மன்னிப்பு கோரினார். இழப்பீடு வழங்கவும் தயார் என்று விசாரணையின்போது கூறினார்.

ஆனால் அதனை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. லாவோவின் காதலர் ஜியிங் கடந்த 1999ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.