பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ- வின் மகன் உள்பட 7 மருத்துவ மாணவர்கள் கார் விபத்தில் சிக்கி பலி
பிறந்தநாள் கொண்டாடி விட்டு நள்ளிரவில் காரில் திரும்பிக் கொண்டிருந்த எம்எல்ஏ மகன் உள்ளிட்ட மருத்துவ கல்லூரி மாணவர்கள் 7 பேர் பயணித்த கார் விபத்துக்குள்ளாகி நொறுங்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் வார்தா மாவட்டத்தில் செல்சுரா கிராமம் அருகே நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் மஹிந்திரா எக்ஸ்யூவி -500 கார் வேகமாக வந்திருக்கிறது.
இந்த கார் பாலத்தில் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் கார் அடையாளம் காண முடியாத அளவிற்கு அப்பளமாக நொறுங்கியதால் காரில் பயணித்த 7 பேரும் பலியாகி இருக்கிறார்கள் .
தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களின் உடல்களை மீட்டனர்.
பின்னர் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பலியான 7 பேரும் வார்தாவில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவ கல்லூரி மாணவர்கள் என்பதும், அவர்களில் திரோரா தொகுதியின் பாஜக எம்எல்ஏ-வின் மகனும் ஒருவர் என தெரியவந்துள்ளது .
முதலாம் ஆண்டு மாணவர்கள், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ஏழு பேரில் ஒரு மாணவரின் பிறந்தநாள் விழாவை யவத்மால் மாவட்டத்தில் கொண்டாடி இருக்கிறார்கள்.
பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடித்துக்கொண்டு நள்ளிரவில் காரில் வேகமாக திரும்பிக் கொண்டிருந்த போதுதான் இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது என்பது தெரியவந்திருக்கிறது.