கோவில் கொட்டகை மீது பழமையான மரம் முறிந்து விழுந்து விபத்து - 7 பேர் உயிரிழப்பு
மகாராஷ்டிராவில் கோவில் கொட்டகை மீது பழமையான மரம் முறிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.
7 பேர் பரிதாப பலி
மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தில் உள்ள பாபுஜி மகாராஜ் கோவில் அருகே 100 ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று உள்ளது.

இந்த நிலையில் பழமையான மரம் திடீரென முறிந்து கோவில் கொட்டகை மீது விழுந்துள்ளது. இதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்த மீட்பு பணி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
நிதியுதவி வழங்க முதலமைச்சர் முடிவு
இதையடுத்து அங்கு வந்த மீட்பு பணித்துறையினர் விழுந்த மரத்தை ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் மீட்டனர்.
காயமடைந்தவர்களில் சிலர் அம்மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே முடிவு செய்துள்ளார்.