இவ்வளவு நாள் நாம் சாப்பிட்டது காய்கறிகள் கிடையாது..பழமாம்..தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க - எவை தெரியுமா?
நாம் உணவில் அன்றாடம் பயன்படுத்தி வரும் காய்கறிகள் குறித்து ஆச்சரியமூட்டும் தகவல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
காய்கறிகள்
உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உயிர்ச்சத்துகள், மினரல்கள் ,அதிக அளவு நார்ச்சத்துக் கொண்டப் பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணுபது மிகவும் அவசியம். எல்லா காய்கறிகளுமே உடலுக்கு தேவையான சத்துகளைக் கொண்டுள்ளது.
இந்த சத்துக்கள் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்து நோய் வராமல் தடுக்கிறது.பொதுவாக, காய்கறிகள் உணவு நார்ச்சத்து, உயிர்ச்சத்துகள் ஏ மற்றும் சி, கால்சியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் முக்கிய ஆதாரமாகும்.
ஒவ்வொரு நாளும் பல வகையான காய்கறிகளைச் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.ஆனால் இதுவரை நாம் காய்கறிகள் என்று நினைத்து வந்தவை பழங்கள் அது பழ வகை என்றால் நம்ப முடிகிறதா?ஆம் காய்கறிகளாகக் கருதி நாம் இதுவரை சாப்பிட பழங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
நம்மில் பலர் தக்காளியைக் காய்கறி என நினைத்து வாங்குவோம். ஆனால் தாவரவியல் ரீதியாகப் பார்த்தால், தக்காளி ஒரு பழம் .இது பெர்ரி வகையைச் சார்ந்தது.
குடைமிளகாய் குடைமிளகாயை இதுவரை நம்மில் பலர் காய்கறியாகப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அது உண்மையில் ஒரு பழம். இந்த புளிப்பு பழம் .சிறந்த செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகிறது.
கத்திரிக்காய் :காய்கறி என நினைத்து கத்திரிக்காயை வாங்குவதுண்டு. ஆனால் கத்தரி ஒரு பழம். கத்தரிக்காய் எந்த உணவுடன் சேர்த்தாலும் அது சுவையாக இருக்கும். இது மிகவும் சத்தானது மற்றும் உயிர்ச்சத்து ஏ மற்றும் சி தவிர, பாலிபினால்கள் நிறைந்துள்ளது.
வெள்ளரிக்காய் :வெள்ளரி ஒரு காய்கறியாகும், ஏனெனில் அதன் நடுவில் விதைகள் உள்ளன மற்றும் தாவரத்தின் பூவிலிருந்து வளரும்.
அவகேடோ :விதைகளைக் கொண்ட பழங்கள். அவை மரத்தின் பூவிலிருந்து வருபவை.இது தொழில்நுட்ப ரீதியாக அவகேடோவை ஒரு பழமாகக் கருதப்படுகிறது.