திருமண மண்டபம் முன் மணமகனின் 7 முன்னாள் காதலிகள் போராட்டம்.... - மனமுடைந்த மணமகள்...!
பெய்ஜிங்கில் திருமண மண்டபம் முன் மணமகனின் 7 முன்னாள் காதலிகள் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமண மண்டபம் முன் போராட்டம் நடத்திய காதலிகள்
பெய்ஜிங், தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தைச் சேர்ந்தவர் சென். இவருக்கு கடந்த பிப்ரவரி 6ம் தேதி திருமணம் நடந்தது. ஆனால், திருமண மண்டபத்தில் கோலாகமாக நடந்து கொண்டிருந்தபோது, 7 இளம் பெண்கள் கோஷம் எழுப்பினார்கள். அந்த 7 இளம் பெண்கள் கையில், பேனர் ஒன்றை வைத்திருந்தனர்.
அவர்கள் அனைவரும் சென்னின் முன்னாள் காதலிகள் என்று அந்த பேனரில் குறிப்பிட்டிருந்தனர். திருமண மண்டபத்திற்கு வெளியே இவர்கள் பேனரை பிடித்துகொண்டு கோஷம் எழுப்பிக்கொண்டிருந்ததால், திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் ஆச்சரியத்தோடு என்ன நடந்தது என்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த 7 பெண்கள், "பெண்களை ஏமாற்றாதீர்கள். பெண்களிடம் நேர்மையாக இருங்கள். எதிர்காலத்தில் அவர்கள் பழிவாங்க முடிவு செய்தால், உங்கள் நிலைமை என்னாகும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதனால் கோபமடைந்த அவரது வருங்கால மனைவி கோஷம் எழுப்பிக்கொண்டிருந்த பெண்களிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும், அவர்களிடம் இங்கிருந்து கலைந்து செல்லுமாறு தகராறில் ஈடுபட்டனர். ஆனால், முன்னாள் காதலிகளை பிரிந்ததற்கான காரணத்தை சென் வெளியில் சொல்லவே இல்லை.
இது குறித்து சென் பேசுகையில், நான் அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். பெண்களின் எதிர்ப்பால் நான் கோபம் அடையவில்லை. கடந்த காலத்தில் நான் ஒரு கெட்ட காதலனாக இருந்தேன். நான் இளமையாக இருந்தபோது முதிர்ச்சி இல்லாமல் பல தவறுகள் செய்தேன். பல பெண்களை காயப்படுத்தியுள்ளேன். உங்கள் காதலியை ஏமாற்றுவதை விட நீங்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்றார்.
