திமுகவில் மாவட்ட செயலாளர்கள் மாற்றம் : வெளியான முக்கிய தகவல்
திமுகவில் 72 மாவட்ட செயலாளர்களில் 7 மாவட்ட செயலாளர்களை மாற்ற திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக மாவட்ட செயலாளர்கள்
ஆளும் திமுகவில் மாவட்ட செயலாளர்கள், கட்சி தலைமை முக்கிய பதவிகள் என அனைத்து கட்சி பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
அதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும், பொதுச்செயலாளராக அமைச்சர் துரைமுருகன் அவர்களும், பொருளாளராக டி.ஆர்.பாலு அவர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவர் என தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் வெளியாகும் அறிவிப்பு
அதே போல, மாவட்ட செயலாளர்களை மாற்றும் முயற்சியும் தீவிரமாக நடைபெற்று வருகிறதாம். அதாவது திமுகவில் உள்ள மொத்தம் 72 மாவட்ட செயலாளர்களில் 7 மாவட்ட செயலாளர்களை மாற்ற முதற்கட்டமாக திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவை எந்தெந்த மாவட்ட செயலாளர்கள் என்பது விரைவில் தெரியவரும் என கூறப்படுகிறது.