உத்தரகாண்டில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர் - பயணித்த அனைவரும் உயிரிழப்பு

Uttarakhand Death Helicopter Crash
By Karthikraja Jun 15, 2025 05:22 AM GMT
Report

உத்தரகாண்ட் ஹெலிகாப்டர்விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹெலிகாப்டர் விபத்து

உத்தரகாண்ட் மாநிலம் குப்தகாசியில் இருந்து ஆர்யன் ஏவியேஷன் ஹெலிகாப்டர் ஒன்றின் மூலம், விமானி ஒரு குழந்தை உட்பட 7 பேர் பயணம் செய்தனர்.

uttarakhand helicopter crash - உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்து

கேதர்நாதில் உள்ள கோவிலுக்கு பயணம் சென்று கொண்டிருந்த நிலையில், கௌரிகுன்ட் - சோன்பிரயாக் வனப்பகுதியில் ஹெலிகாப்டர் மாயமானது.

இதனையடுத்து, தகவலறிந்த பேரிடர் மீட்புபடையினர் உடனடியாக தேடுதல் பணியில் ஈடுபட்ட போது, விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது தெரியவந்தது. 

uttarakhand helicopter crash - உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்து

இதில், பயணித்த 7 பேரும் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணியில் உள்ளூர் நிர்வாகம் மற்றும் மீட்பு படையினர் ஈடுபட்டிருக்கின்றனர்.

இந்த விபத்துக்கு உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.