வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு வருகிறது புதிய கட்டுப்பாடு - ரெடியா இருங்க..!
வெளிநாட்டில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் 7 நாட்கள் கட்டாயமாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட புதிய விதிகளை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள ஒமைக்ரான் பரவல் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31 ஆம் தேதி வரை, சர்வதேச விமான சேவை இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய தேவைக்காக பயணிகள் மட்டும் சென்று வருகின்றனர்.
அதனடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் அனைவரும் வீடுகளில் தங்களை குறைந்தது 7 நாட்களாகவது தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பயணிகள் அனைவரும் தங்களது அனைத்து விபரங்களையும், கடந்த 14 நாட்களில் சென்று வந்த நாடுகளின் விபரங்களையும் சுவிதா இணையதளத்தில் பதிவிட வேண்டும்.
இதேபோன்று 72 மணி நேரத்திற்குள்ளாக ஆர்.டி. பி.சிஆர். பரிசோதனை மேற்கொண்டு அதில், கொரோனா நெகடிவ் என்ற தகவலையும் சம்பந்தப்பட்ட பயணிகள் உறுதி செய்ய வேண்டும். இதை செய்ய தவறினால் அது கிரிமினல் குற்றமாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில், போத்ஸ்வானா, சீனா, மொரீஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், இஸ்ரேல், தான்சானியா, கானா, காங்கோ, எத்தியோப்பியா, கஜகஸ்தான், கென்யா, நைஜீரியா, துனிசியா, ஜாம்பியா ஆகிய நாடுகள் அதிக பாதிப்பு கொண்டவையாக தீர்மானிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.