பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறப் போவது இவரா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் நடைமுறையில் மீண்டும் பழைய போட்டியாளர்கள் 7 பேர் இடம் பெற்றுள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் வெற்றிகரமாக 60 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் திங்கட்கிழமைகளில் நாமினேஷன் செய்யும் நடைமுறை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வாரமும் தலா இரண்டு அல்லது மூன்று போட்டியாளர்களை ஒவ்வொரு ஹவுஸ்மேட்டும் நாமினேட் செய்ய வேண்டும்.
அதன்படி இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் புராசஸில் ஒவ்வொரு போட்டியாளரும் தலா மூன்று பேரை நாமினேட் செய்தனர். பாவனி பிக்பாஸ் வீட்டின் கேப்டன் என்பதால் அவரை யாரும் நாமினேட் செய்ய முடியாது.
இதனை தொடர்ந்து நடைபெற்ற நாமினேஷன் நடைமுறையில் 7 பேர் இடம் பிடித்தனர். அதன்படி அபினய், இமான் அண்ணாச்சி, அமீர், நிரூப், அக்ஷரா, தாமரை, சிபி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
இறுதியாக நாமினேஷன் லிஸ்ட்டை வாசித்த பிக்பாஸ், நிரூப்பிடம் இருக்கும் காயினை பயன்படுத்தி எவிக்ஷனுக்கான புராசஸில் இருந்து காப்பாற்றி கொள்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு சரி என நிரூப் சொல்ல இதனைக் கேட்ட பிக்பாஸ் யாரை மாற்ற விரும்புகிறீர்கள் என்றார். அதற்கு வைல்டு கார்டு என்ட்ரியான சஞ்சீவ்வின் பெயரை கூறினார்.
இதனை தொடர்ந்து இருவருக்கும் போட்டி வைத்த பிக்பாஸ் இதில் யார் தோற்பவர் நாமினேஷனில் இடம் பெறுவார் என்று அறிவித்தார். இதையடுத்து கார்டன் ஏரியாவில் இருவருக்கும் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் நிரூப் தோல்வியை தழுவினார். சஞ்சீவ் வெற்றி பெற்றார். இதனால் எவிக்ஷன் புராசஸிற்கான நாமினேஷனில் இருந்து தப்பித்தார் சஞ்சீவ். நிரூப் நாமினேஷனில் தொடர்ந்து இடம் பிடித்தார்.
இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து அபினய்தான் வெளியேற்றப்படுவார் என ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.