நாடாளுமன்ற தேர்தல்: அதிமுக - பாமக இடையே கூட்டணி உடன்பாடு, எத்தனை தொகுதிகள்?
கூட்டணி தொடர்பாக அதிமுக, பாமக தலைவர்கள் இன்று மாலை சந்தித்து பேச திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாமக கூட்டணி
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு என தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே கூட்டணி தொடர்பாக பாஜக, அதிமுக ஆகிய 2 கட்சிகளுடன் பாமக ரகசியமாக பேசி வந்தது. ஆனால் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு பாமக மாவட்ட செயலாளர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக தகவல் வெளியானது.
7 தொகுதிகள்?
இதனையடுத்து அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது என்று பாமக முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அதிமுக கூட்டணியில் பாமக 10 தொகுதிகளை கேட்ட நிலையில் 7 தொகுதிகளை ஒதுக்குவதற்கு அதிமுக சம்மதித்திருப்பதாகவும்,
இதனால் 2 கட்சிகளுக்கு இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அதிமுக, பாமக தலைவர்கள் இன்று மாலை சந்தித்து பேச திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.