7 குளத்தை காணவில்லை - நடிகர் வடிவேலு பட பாணியில் புகார் அளித்த தொழிலாளி
நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேல் திரைப்படம் ஒன்றில் கிணற்றை காணவில்லை கண்டுபிடித்து கொடுக்குமாறு போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்.
7 குளத்தை காணவில்லை
இந்த பட காமெடி காட்சியை போல திருவள்ளூரில் 7 குளத்தை காணவில்லை என தொழிலாளி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பூதுார் ஊராட்சியில் உள்ள 7 குளங்கள் ஆக்கிரமிப்பாளர்களால் மாயமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அதே பகுதியில் டீக்கடை நடத்தி வரும் சிவக்குமார் என்பவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்துள்ளார். ஆனால் குளத்தை மீட்பது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த சிவக்குமார் வழக்கம் போல மாயமான 7 குளத்தை மீட்க வேண்டும் என்று அங்குள்ள அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
எந்த நடவடிக்கையும் இல்லை
அவரின் புகாரை காதில் வாங்காமல் அதிகாரிகள் எனக்கென இருந்ததாக கூறப்பபடுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சிவக்குமார் பூதுாரில் 7 குளங்களை காணவில்லை என்று கையில் பதாகை ஏந்திய படி கோட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர் அதிகாரிகளிடம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சிவக்குமார் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இது குறித்து பேசிய சிவக்குமார் 5 ஆண்டுகளில் அடுத்தடுத்து ஆக்கிரமிப்பால் 5 குளங்கள் மாயமாகிவிட்டது.
இது பற்றி ஏற்கனவே பல முறை வட்டாசியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரையிலும், முதலமைச்சரின் தனி பிரிவுக்கும் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதை தொடர்ந்து தனக்கு மிரட்டல்களும் வருகின்றன.இது பற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.