66 வயதில் 10வது குழந்தை பெற்ற பாட்டி - மிரண்ட மருத்துவர்கள்!
66 வயதுப் பெண்மணி தனது 10வது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
10வது குழந்தை
ஜெர்மனியைச் சேர்ந்தவர் அலெக்சாண்ட்ரா ஹில்டபிராண்ட் (66). இவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது 10வது குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
மனித உரிமை ஆர்வலரான ஹில்டபிராண்ட், இதுகுறித்து பேசுகையில், "நான் மிகவும் ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடுகிறேன், தினமும் ஒரு மணிநேரம் தவறாமல் நீச்சல் அடிக்கிறேன், இரண்டு மணி நேரம் நடக்கிறேன்.
தான் எப்போதும் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தியதில்லை. புகைப்பிடிப்பதோ அல்லது மது அருந்துவதோ இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
ஆரோக்கிய வாழ்வு
இந்த நிகழ்வு குறித்து இந்திய மகப்பேறு மருத்துவர் டாக்டர் கானா ஸ்ரீனிவாஸ் கூறுகையில், "உடல் தகுதியும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் மக்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்குக் காரணம். இருந்தாலும், கர்ப்பகால அபாயத்தில் வயது ஒரு முக்கிய காரணியாக உள்ளது.
60களில் இயற்கையாகக் கருத்தரிப்பது மிகவும் அரிது. அப்படி கரு உருவானாலும் அந்த கர்ப்பம் அதிக ஆபத்துடையதாகவே கருதப்படும். கர்ப்பகால நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், ப்ரீக்ளாம்ப்சியா, நஞ்சுக்கொடி சிக்கல்கள் மற்றும்
முந்தைய பிரசவங்கள் ஆகியவை குறிப்பிடத்தக்க அளவில் ஆபத்தை அதிகரிக்கின்றன.சிசேரியன் பிரசவம் மற்றும் பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்களின் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன" என்று எச்சரித்துள்ளார்.