அமேசான் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானம்: 66 பேர் பலி

Plane Crash Colombia
By Fathima Mar 24, 2026 08:37 AM GMT
Report

125 பேருடன் புறப்பட்ட ராணுவ விமானம் அமேசான் வனப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 66 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொலம்பியாவின் புட்டுமாயோ மாகாணத்தில் இருந்து புறப்பட்ட சி-130 ஹெல்குலஸ் விமானம் 1.5கி.மீ தொலைவிலேயே தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது.

விமானத்தில் 125 ராணுவ வீரர்கள் பயணித்த நிலையில், 66 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானம்: 66 பேர் பலி | 66 Dead In Military Plane Crash Colombia

விமானம் புறப்பட்ட சில நிமிடங்கள் விபத்து நடந்துள்ளது, எரிபொருள் வெடித்து சிதறியதே காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

காயமடைந்த பலரும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

வனப்பகுதி என்பதால் மீட்புபணிகள் மேற்கொள்ள சிரமம் இருந்த நிலையில் தற்போது மீட்பு நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.