இந்தியாவை விட்டு ஓட்டம் பிடிக்கும் பணக்காரர்கள் - எந்த நாடுகளுக்கு போறாங்க தெரியுமா?

Singapore India
By Sumathi Jun 16, 2023 06:37 AM GMT
Report

இந்தியாவில் இருந்து 6,500 மில்லியனர்கள் இடம் பெயர உள்ளனர்.

மில்லியனர்கள் 

ஹென்லி பிரைவேட் வெல்த் மைகிரேஷன் (Henley Private Wealth Migration Report) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதிலும் செல்வம் மற்றும் மில்லியனர்களின் இடம்பெயர்வு குறித்து ஆய்வு செய்தது.

இந்தியாவை விட்டு ஓட்டம் பிடிக்கும் பணக்காரர்கள் - எந்த நாடுகளுக்கு போறாங்க தெரியுமா? | 6500 Indian Millionaires Migrating Abroad

இந்தியாவில் இருந்து இடம்பெயர்பவர்களுக்கான சிறந்த தேர்வாக சிங்கப்பூர் இருக்கிறது. 2023ல் ஆஸ்திரேலியாவுக்கு 5,200 மில்லியனர்களும், சிங்கப்பூருக்கு 3,200 மில்லியனர்களும் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடம்பெயர்வு

அதே நேரத்தில் அமெரிக்கா தன் மில்லியனர் கிளப்பில் 2,100 பேரைச் சேர்க்கும். ஸ்விட்சர்லாந்து, கனடா, கிரீஸ், பிரான்ஸ், போர்ச்சுகல் மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் மில்லியனர்களின் வருகை அதிகமுள்ள 10 நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

இந்தியாவை விட்டு ஓட்டம் பிடிக்கும் பணக்காரர்கள் - எந்த நாடுகளுக்கு போறாங்க தெரியுமா? | 6500 Indian Millionaires Migrating Abroad

தொடர்ந்து, ``இந்த மில்லியனர்கள் வெளியேற்றம் பற்றி இந்தியா கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில், இந்தியா இடம்பெயர்தலில் இழப்பதைவிட, அதிகமான புதிய மில்லியனர்களை உருவாக்குகிறது" என நியூ வேர்ல்ட் வெல்த் நிறுவனத்தின் ஆராய்ச்சித் தலைவர் ஆண்ட்ரூ அமொயில்ஸ் குறிப்பிட்டுள்ளார்.