கடைக்கு சென்ற 6 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்த 65 வயது முதியவர் - கொடூர சம்பவம்!
6 வயது சிறுமிக்கு 65 வயது முதியவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
சென்னை வடசென்னை புதுகாமராஜர் நகர் பகுதியை சேர்ந்த சிறுமியை அவரது பெற்ற்ரோர் அருகிலுள்ள பொட்டிக் கடைக்கு சில பொருட்களை வாங்க அனுப்பியுள்ளனர். அப்போது கடைக்கு சென்ற சிறுமியை அங்கிருந்த 65 வயதுடைய பாண்டியன் என்ற முதியவர் ஒருவர் வழிமறித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
அழுதுகொண்டே வீட்டிற்கு வந்த சிறுமி நடந்ததை பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காசிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
போக்ஸோவில் கைது
இந்நிலையில் தலைமறைவாக இருந்த பாண்டியனை எண்ணூரில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். முதியவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.