‘நான் மூதாட்டிகளை நோட்டமிட்டு பாலியல் பலாத்காரம் செய்வேன்...’ - 23 வயதான இளைஞர் அளித்த பகீர் வாக்குமூலம்
கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி, புதுச்சேரி, பாகூர் தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரத்தில் 65 வயது மூதாட்டி வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஒரு வாலிபர் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடி விட்டார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வழக்குப் பதிவு செய்த போலீசார் மர்ம நபரை தேடி வந்தனர். இதனையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மீன்சுருட்டியில் 3 மூதாட்டிகள், மீண்டும் மர்ம நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.
அடுத்தடுத்து, நடந்த இந்த பாலியல் பலாத்காரம் குறித்து போலீசார் குற்றவாளியை கண்டுபிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், கடலுார் மாவட்டம், பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான சிலம்பரசன் என்ற வாலிபரை ஒரு திருட்டு வழக்கில் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
அப்போது, அவனிடம் போலீசார் தீவிர கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, அவன் கொடுத்த வாக்குமூலம் போலீசாராரையே அதிர வைத்தது.
வாக்குமூலத்தில், நான் மூதாட்டியை டார்கெட் செய்து பாலியல் வன்கொடுமை செய்வேன். நான் ஒரு மூதாட்டியை பலாத்காரம் செய்து அவரிடமிருந்த செல்போனை பறித்து சென்றேன் என்றான்.
அடுத்தடுத்து மூதாட்டிகள் பலாத்கார வழக்கிலும் சிலம்பரசனுக்கு தொடர்பு இருக்கிறதா என்று போலீசார் அவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்த அவனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.