ராமருக்கு தங்க காலனி - அயோத்திக்கு 8,000 கி.மீ. பாதயாத்திரை செல்லும் 64 வயது அதிகாரி
அயோத்திக்கு 8,000 கி.மீ. முதியவர் ஒருவர் பாதயாத்திரையாக செல்கிறார்.
ராமர் கோயில்
தெலங்கானா, ஹைதராபாத்தை சேர்ந்தவர் சல்லா ஸ்ரீநிவாச சாஸ்திரி (64). இவர் வருமான வரித் துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
அயோத்தியில் ராமர் கோயிலில் காணிக்கையாக செலுத்த ஒரு கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளியில் தங்க பாதுகையை இவர் தயார் செய்துள்ளார்.
தங்க பாதுகை
இதனை அயோத்தியில் இருந்து தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்துக்கு ராமர் வந்த வழியை ஆராய்ச்சி செய்து அந்தப் பாதை வழியாக தங்க பாதுகையை தலையில் சுமந்து செல்ல இவர் முடிவு செய்துள்ளார். அதன்படி, ராமேஸ்வரத்தில் பாதயாத்திரையை தொடங்கி ஆந்திரா,ஒடிசா, மகாராஷ்டிரா, குஜராத் வழியாக சென்று உத்திரப்பிரதேசம், சித்திரக்கூட மாவட்டத்தைச் சென்றடைந்துள்ளார்.
அங்கிருந்து அடுத்த 2 வாரங்களில் அயோத்தியை சென்றடைந்து ராமர் கோயிலுக்கு தங்க பாதுகையை காணிக்கையாக வழங்க உள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ராமருக்கு தங்க பாதுகையை காணிக்கையாக வழங்க முடிவு செய்து, ரூ.65 லட்சம்செலவில் தயார் செய்தேன்.
அந்த தங்க பாதுகையை தலையில் சுமந்து, சுமார் 8,000 கி.மீ. தொலைவு பாதயாத்திரையாக செல்கிறேன். நாள்தோறும் 30 கி.மீ. முதல் 50 கி.மீ. வரை நடைபயணம் மேற்கொள்கிறேன். அடுத்த இரு வாரங்களுக்குள் அயோத்தியை சென்றடைவேன். அங்கு சென்ற பிறகு முதல்வர் ஆதித்யநாத்திடம் தங்க பாதுகையை சமர்ப்பிக்க உள்ளேன். எனது வாழ்நாளின் கடைசி காலத்தை ராமரோடு கழிக்க திட்டமிட்டு உள்ளேன். அதற்காக அயோத்தியில் ஒரு வீட்டை கட்டி தங்க முடிவு செய்துள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.